இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதில் மே 20 ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கப்போகிறது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட தினத்தில் 115.6 முதல் 204.4 மில்லி மீட்டர் வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்படலாம்.
அதோடு மின்சார விநியோகத்திலும் இடையூறு ஏற்படலாம். அதில் மே 20 ஆம் தேதி தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் காரணமாக மே 20-ல் தமிழகத்தில் பல இடங்களில் 50 கிலோமீட்டர் வேக தரைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் என்றால் 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 204.5 மில்லி மீட்டர் முதல் அதற்கு அதிகமான மழை பதிவாக வாய்ப்பு இருக்கும். மேலும் அனைத்து வகையான போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதுமட்டுமின்றி உயிரிழப்புகளையும் கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ரெட் அலர்ட் காரணமாக தமிழகத்தில் தேவையான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்ள தயாராகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.