மாண்புமிகு பிரதமர் பல்வேறு திட்டங்களை காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தார். அதன் ஒரு அங்கமாக விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனில் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ் சிறுவந்தாடு பட்டு சேலைகள் விற்பனை நிலையத்தை இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய பாஜகவின் விழுப்புரம் மாவட்ட தலைவர் வி ஏ டி கலியவரதன் நண்பர் ரவிக்குமார் கடந்த ஐந்தாண்டு சிறப்பாக பணியாற்றினார் அவரிடம் சில கோரிக்கைகளை வைக்கிறோம் அடுத்து வரும் ஐந்து ஆண்டில் அவற்றையும் நிறைவேற்றித் தருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று பேசினார்.
அடுத்ததாக நடைபெறும் தேர்தலில் மீண்டும் ரவிக்குமார் வெற்றி பெறுவார் என்று பாஜகவை சேர்ந்த மாவட்ட தலைவரே ஆருடம் சொன்னது அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இதே நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் கலந்து கொண்டார். அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கிற பிஜேபி காங்கிரஸ் கூட்டணி ஒரு பக்கம் மோதிக் கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பாஜகவை சேர்ந்த மாவட்ட தலைவரே இப்படி பேசியிருப்பது விடுதலை சிறுத்தை கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் முடிவாயிற்று அதில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் விழுப்புரத்தில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் தான் போட்டியிடுவார் என்று பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த பேச்சு ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இருக்கும் நிலையில் இது போன்ற அரசியல் பேச்சுகள் அதிகமாவது வழக்கம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Leave a Reply
You must be logged in to post a comment.