ராணிப்பேட்டை : மகள்களை கிண்டல் செய்த நபர்களை தட்டிக்கேட்ட தந்தைக்கு கத்தி குத்து …

1 Min Read
கொலை குற்றவாளிகள் அஜீத் - சரண்

ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டைபூர்விகமாக கொண்டு  வசித்திவந்தவர் சுந்தரேசன் (வயது 48). இவர் ராணிப்பேட்டை சிப்காட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் .

- Advertisement -
Ad imageAd image

இதில் அவரது இரண்டு மகள்கள் வாலாஜாவில் உள்ள கல்லூரியில்   படித்து வருகின்றனர். மாணவிகள் கல்லூரியில் முடிந்து வீட்டுக்கு திரும்பும்  பொழுது, லாலாபேட்டை பகுதியை  சேர்ந்த அஜீத், சரண் ஆகிய 2 வாலிபர்கள் மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர்.

இது குறித்து மாணவிகள் இருவரும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவிகளின் தந்தை சுந்தரேசன், வாலிபர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த வாலிபர்கள் சுந்தரேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த சுந்தரேசன் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதகமாக இறந்துவிட்டார்.

இது குறித்து மாணவிகளின் தாயார் வள்ளி அளித்த புகாரின் பெயரில்   சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

Share This Article

Leave a Reply