புதுச்சேரியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதில் என்.ஆர் காங்கிரஸ் -10, பாஜக -6 திமுக -6, காங்கிரஸ் -2, சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றனர். 16 இடங்களை கைப்பற்றி தேஜ கூட்டணி ஆட்சியமைத்தது.
அப்போது 6 சுயேச்சைகளில் 3 பேர் பாஜகவுக்கும், பிரச்சனைகளின் அடிப்படையில் 3 பேர் என்.ஆர் காங்கிரசுக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர். மூன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தேஜ கூட்டணி ஆட்சி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

அமைச்சர் நமச்சிவாயம் எப்படியாவது வெற்றி பெறுவார். வாரிய தலைவர் பதவிகளை வழங்க வேண்டுமென ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த ரங்கசாமி, அதிருப்தி பாஜக எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு,
எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம், ஏன், இப்போது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே டெல்லி பயணத்தை தவிர்க்குமாறு கூறினர். ஆனால் அவரது சமாதானத்தை ஏற்க மறுத்து, கல்யாணசுந்தரம் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார்,

ரிச்சர்ட் ஜான்குமார் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக், வெங்கடேசன் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து, ஒருமுறை கூட கூட்டணி கட்சி கூட்டத்தை ரங்கசாமி கூட்டியதில்லை.
தன்னிச்சையாகவும், தான் தோன்றித்தனமாகவும் ஆட்சியை நடத்தி வருகிறார். முதல்வர், அமைச்சர்கள் மீது பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள் எழுகிறது. இதுபோன்ற சூழலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு துளியும் விருப்பமில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

பாஜக மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் ரங்கசாமிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் மாநிலத்துக்கு ஒரு நன்மையும் இல்லை. கடன் தள்ளுபடி செய்தனரா? கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதா?
அதோடு தமிழிசை உள்ளிட்ட எந்த துணைநிலை ஆளுநரும் இணக்கமாக செயல்படுவது போல பாவலா காட்டினாலும், நிர்வாகத்தை சுதந்திரமாக நடந்த அனுமதிக்கவில்லை.
நியமன எம்.எல்.ஏ, ராஜயசபா எம்பியை பறித்துக் கொண்டனர். அப்படியிருந்தும், கூட்டணியை மக்களுக்காக தொடர்ந்து வந்தோம். ஆனால் இதுபோன்ற நிலை இனிமேல் நீடிப்பது, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒத்துவராது என நெருங்கியவர்களிடம் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ஆட்சியை கலைப்பதையும் ரங்கசாமி விரும்பவில்லை. எனவே எதிர்கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவை நாடி ரகசிய தூது விட்டுள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த பாஜக அமைச்சர்கள் முதல்வரை சமாதானப்படுத்தியும் ஏற்கவில்லையென கூறப்படுகிறது.
இதுபோன்ற இந்தளவுக்கு தனக்கு நெருக்கடி கொடுப்பதால், பாஜகவுடனான கூட்டணியை ரங்கசாமி முறித்துகொள்ளலாம் என ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் முதல்வர் ரங்கசாமியை பாஜக தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சனை தீர்க்கப்படாவிடில், புதுச்சேரியில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் நிகழக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.