ஸ்ரீ மங்கள நாத சாமி திருக்கோயிலின் சித்திரைத் தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

1 Min Read
திரு உத்தரகோசமங்கை ஸ்ரீ மங்கள நாத சாமி

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சாமி கோயில் மிகவும் பழமையும், புராதான சிறப்புமிக்க  உலகப் பிரசித்தி பெற்ற சிவாலய திருக்கோயில் ஆகும்.

- Advertisement -
Ad imageAd image
சித்திரைத் தேரோட்டம்

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை உற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு கடந்த ஏப்ரல் 26 ஆம் நாள் மங்களேஸ்வரி அம்மன் சன்னதிக்கு முன்புறமுள்ள கொடி மரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையுடன் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கும் இரவில் பூதவாகனம், சிம்ம வாகனம், அன்னப் பறவை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்துடன் உற்ஸவராய் மங்களேஸ்வரி அம்மன் 4 ரத வீதிகளிலும் திருவிதி உலா வந்து மக்களுக்கு  காட்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 50 அடி உயர பெரும் தேரில் உற்சவமூர்த்தி புறப்பட்டு சுமார் நான்கு ரத வீதிகளிலும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அரோகரா என கோசமிட்டும்
சிவனடியார்கள் சிவபுராணம் படிக்க மங்கள வாத்தியம் இசைக்க ஆரவாரத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Share This Article

Leave a Reply