விடுதலை படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினி

1 Min Read
ரஜினிகாந்த் உடன் விடுதலை பட குழுவினர்

வெற்றிமாறனின் விடுதலை படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்  இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படம் விசாரணை, அசுரன் போன்று மிகவும் அழுத்தமான திரைப்படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.  இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொது மக்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share This Article

Leave a Reply