விருதுநகர் மாவட்டம், அடுத்த ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிழவன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ் மகாலட்சுமி இவர்களுக்கு ஐயப்பன் (20). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
சிவகார்த்திகேயன் (10) என்கிற இரு மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் மகாலட்சுமியின் கணவர் புஷ்பராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்த நிலையில் கூலி வேலை பார்த்து தாய் மகாலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மேலும் அதே பகுதியில் இவர்களது வீட்டின் அருகே நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட சதீஷ் (48) என்பவர் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கணவனை இழந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தாய் மகாலட்சுமி மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது,

வீட்டில் அருகே வசித்து வந்த சதீஷ் மற்றும் அவரது சக நண்பர்களுடன் மகாலட்சுமியை தரை குறைவாக பேசி கேலி செய்து வசைப்பாடி உள்ளனர். இதனால் மனமுடைந்த மகாலட்சுமி கடந்த இரு தினங்களாக குழந்தைகளுடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
தனது தாய் சோகமாக மனம் உடைந்து இருப்பதை கண்ட மகாலட்சுமியின் மூத்த மகன் ஐயப்பன் தாயிடம் விசாரித்துள்ளார். தாய் மகாலட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சதீஷ் மற்றும் சக நண்பர்களுடன் கேலி செய்ததை மகனிடம் கூறிய நிலையில்,

ஆத்திரம் அடைந்த மகன் ஐயப்பன் நேற்று இரவு வீட்டில் மது போதையில் இருந்த சதீஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் பொறுமையை இழந்த ஐயப்பன் வீட்டின் அருகே இருந்த உருட்டு கட்டை எடுத்து சதீஷை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரது சண்டையும் தடுத்து நிறுத்தி அவரவர் வீட்டிற்கு அனுப்பிய நிலையில் ஐயப்பன் தாக்கியதில் பலத்த காயமடைந்த சதீஷ் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக கிடந்துள்ளார்.

மேலும் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் இறந்து கிடந்த சதீஷின் உடலை கைப்பற்றி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ஐயப்பனை கைது செய்து மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.