தனக்கு உரிய மரியாதை அளிக்கப் பெறவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் இன்று பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது .
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ராஜகோபாலச்சாரி. இதுபற்றி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார். அதன்படி, கடந்த 2001-ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளார்.
இவர் இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய கவுன்சில் உறுப்பினர் மற்றும் தேசிய ஊடக குழு உறுப்பினர் என எண்ணற்ற பதவிகளை வகித்து உள்ளார்.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடரபாளரான கேசவன் பா.ஜ.க.வில் இன்று இணைய இருக்கிறார் என தகவல் வெளிவந்து உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் மிக பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வில் என்னை சேர்த்ததற்காக, அதுவும் பிரதமர் மோடி தமிழகத்தில் இருக்கும்போது, உங்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். கடந்த ஜனவரியில் காங்கிரசில் இருந்து விலகிய அனில் அந்தோணி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி. முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் நேற்று முன்தினம் இணைந்து உள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, உறுப்பினர் அட்டையையும் மந்திரி பியூஷ் கோயல் வழங்கினார். கடந்த காலத்தில் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது இளம் தலைமுறையினரும் விலகி வருவது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.