திருப்பூர் மாநகரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருந்து வரும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர். அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆய்வு.

திருப்பூர் மாவட்டத்தில், பருவ மழை விடிய விடிய நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் குறிப்பாக அவிநாசி பகுதியில் 144 சென்டி மீட்டர், மலையும் திருப்பூர் வடக்கு பகுதியில் 167 சென்டி மீட்டர், மழை பொழிவும் அளவு பதிவாகி உள்ளது. இந்த கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் குறிப்பாக நெருப்பெரிச்சல் பகுதியில் அதிக அளவில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாலையிலேயே அங்கு சென்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை நீர் மோட்டார் மூலம் துரிதமாக அப்புறப்படுத்தினர். இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், மும்மூர்த்தி நகர், அங்கரிபாளையம் சாலை, வாலிபாளையம் சாலை ஆகிய உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீரோடு சேர்ந்து சாக்கடை நீரும் கலந்து நுழைந்து வீடுகளுக்கு சென்றது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்ததோடு மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினர்.

முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாததே அவ்வப்போது மழை பெய்யும் போது மழை நீர் தேங்கி நிற்பதாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களிடம் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.