தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,”தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் இயற்கை திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக 19.04.2023 மற்றும் 20.04.2023 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.04.23 மற்றும் 20.04.23 அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் காணப்படும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.