புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி அமெரிக்கா செல்லுகிறார் இன்று.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவரது மக்களவை எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து எம்பி களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ்போர்ட்டை ராகுல் காந்தி அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய சாதாரண பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க ராகுல் காந்தி முடிவு செய்தார். அவர் மீது தொடரப்பட்ட நேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது இதனால் தடையில்லா சான்று கேட்டு ராகுல் சார்பில் அந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை அடுத்து ராகுல் காந்திக்கு நேற்று புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இன்று மாலை அமெரிக்காவுக்கு ராகுல் புறப்படுகிறார். ஜூன் 4-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் சான்பிரான்சிஸ் கோவிலில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்து விளையாடுகிறார் எம்பிக்களை சந்திக்கிறார் நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.