கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி முதல்வர் பதவியை கைப்பற்றியது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அந்த கட்சி கொண்டாடி வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லி அருகே நள்ளிரவில் லாரியில் பயணம் செய்து ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல்காந்தி இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவர், காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை செய்தார். இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.அந்த நடை பயணத்தின் போது பல தரப்பு மக்களையும் ராகுல் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடக தேர்தலின் போதும் ராகுல்காந்தி இருசக்கர வாகனத்தில் சென்று டெலிவரி பாய்களுடன் உரையாடினார். மேலும், பேருந்துகளில் பயணித்து பயணிகளுடன் உரையாடினார்.இது போன்ற நிகழ்வுகள் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்குமென ராகுல் நினைக்கிறார்.
இந்தநிலையில், நேற்றிரவு டெல்லியில் இருந்து சிம்லாவிற்கு காரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது டெல்லி- சண்டிகர் நெடுஞ்சாலையில் திடீரென காரை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள சாலையோர உணவகங்களுக்கு சென்றார். அப்போது உணவருந்தி கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களிடம் ராகுல் காந்தி குறைகளை கேட்டு அறிந்தார்.
அதன்பின்னர் ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதிவரை காரில் சென்ற அவர், திடீரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய ராகுல் காந்தி, சாலையோரம் இருந்த லாரி ஓட்டுநர்களிடம் பேசினார்.அப்போது திடீரென லாரியில் ஏறி அமர்ந்துகொண்ட அவர், லாரியிலேயே பயணம் மேற்கொண்டார். கனரக லாரி டிரைவர்கள் இரவு முழுவதும் லாரி ஓட்டும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக அவர் லாரியில் பயணம் செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறிவருகின்றனர்.Rahul suddenly travels
Leave a Reply
You must be logged in to post a comment.