எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள குருதேக் பகதூர் நகருக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு பணிபுரியும் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

மேலும் அவர்கள் செய்யும் பணிகளை செய்து பார்த்தார். மேலும் அவர்களிடம் தொழில்களில் உள்ள பிரச்சனை குறித்தும் கேட்டறிந்தார். இதுதொடர்பாக தனது வாட்ஸ்அப் சேனலில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி;- ‘இந்தியாவில் இன்று உடலுழைப்புக்கு மரியாதை இல்லை.
இதை நான் முன்பே கூறியிருந்தேன். இன்று, வேலை தேடி தினமும் நிற்கும் தொழிலாளர்களை டெல்லி ஜிடிபி நகரில் சந்தித்து பேசியதன் மூலம் இந்த விஷயம் உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்கள் பணவீக்கத்தின் காரணமாக அற்பமான தினசரி கூலியில் வாழ்கிறார்கள். அதற்கும் உத்தரவாதம் இல்லை. இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு முழு உரிமைகளையும், மரியாதையையும் வழங்க வேண்டும். இது எனது வாழ்க்கையின் நோக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.