விஜய் கட்சியில் இணையும் ராகவா லாரன்ஸ் – KPY பாலா..? பரபரப்பு அப்டேட்..!

2 Min Read

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் மன்றத்தை நடத்தி வருகிறார். அந்த மன்றத்தின் சார்பாக பல உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து அரசியலில் களமிறங்குவது பற்றியும் அவர் ஆலோசித்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

ஒருபக்கம் திரைப்படங்களிலும் விஜய் தொடர்ந்து நடித்து வந்தார். எனவே, விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரின் ரசிகர்களில் பெரும்பாலானோர் விரும்பினார்கள்.

நடிகர் விஜய்

இந்த ஆசையை போஸ்டர், பேனர்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அவர்கள் எதிரொலித்து வந்தனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும்,

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும் விஜய் கூறினார். இது அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும், இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் பட வேலைகளை முடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் அவர் அறிவித்தார். இப்போது விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம்

இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு பின் விஜய் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விஜயின் கட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் டிவி பாலா இருவரும் இணையப்போவதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி பலருக்கும் உதவி செய்து வருபவர்.

விஜய் கட்சியில் இணையும் ராகவா லாரன்ஸ் – பாலா

அதேபோல், பாலாவும் பல ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் இருவரும் இணைந்து பல உதவிகளை செய்ய துவங்கினார்கள். மக்களுக்கு இவர்கள் மீது நல்ல அபிமானம் இருக்கிறது.

இருவரின் செயலையும் பலரும் பாராட்டி வருகின்றனர். எனவே தான், அவர்களை தங்களின் கட்சியில் இழுத்துப்போட விஜய் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

Share This Article

Leave a Reply