ஜிஎஸ்டி குறித்து கேள்வி – இளம்பெண் மீது பாஜகவினர் தாக்குதல் வீடியோ வைரல்..!

1 Min Read
ஜிஎஸ்டி குறித்து கேள்வி - இளம்பெண் மீது பாஜகவினர் தாக்குதல் வீடியோ வைரல்

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பாஜகவினரிடம் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம்.

- Advertisement -
Ad imageAd image

அநாகரிகமாக பேசி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஜிஎஸ்டி குறித்து கேள்வி – இளம்பெண் மீது பாஜகவினர் தாக்குதல் வீடியோ வைரல்

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்களிடம் ஜி‌.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

சங்கீதா

அதில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி தகாத வார்த்தைகளால் பேசி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற போது சங்கீதா தனது கைபேசியில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜிஎஸ்டி குறித்து கேள்வி – இளம்பெண் மீது பாஜகவினர் தாக்குதல் வீடியோ வைரல்

இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply