தமிழக வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு ஆகியவை போதுமான அளவு கிடைப்பதில்லை.அதனால் வன விலங்குகள் மலைபகுதி மற்றும் வனப் பகுதியில் இருந்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர், உணவு தேடி வருகின்றன.அதனால் அவை சாலைகளை கடக்கும் போது விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றன.எனவே வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு உணவு கிடைக்கும் அளவிற்க்கு மரக்கன்றுகள் நட்டு பராமறிக்க வேண்டும்.
இதே போன்றுதான் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியின் அருகாமையில் உள்ளதால் நாள் தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து புகுந்து வருவது வழக்கம்.

இந்நிலையில் தான் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூரில் ஜெயராம் என்பவரது விவசாயி தோட்டத்து வீட்டுக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது மலைப் பாம்பு இருப்பதை கண்டறிந்தார் ஜெயராமன்.
இதனை அடுத்து கோயமுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் ஜெயராமன் அதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் வீட்டின் பல பகுதிகளில் தேடினர் பின்னர் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாபமாக பிடித்தனர் பின்னர் தாங்கள் கொண்டுவந்த உபகரனத்தில் செலுத்து அருகே உள்ள கெம்பனூர் வனப் பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.
அப்போது பொது மக்களிடம் பேசிய வனத்துறையினர். இது போன்ற மலை பாம்புகளும் அரியவகை பாம்புகளும் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாக்கம் தான் அதுவும் காடுகளுக்கு அருகே உள்ள குடியிருப்பில் இது தவிற்கமுடியாது,அப்படி வந்தால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்களாகவே பிடிக்க முயற்சி செய்யக் கூடாது, அது போல் விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்தாலும் அவர்களாகவே விரட்ட முற்படக்கூடாது வனத்துறை தகவல் தெரிவித்தால் உடனடியாக வந்து யானைகளை விரட்டும் பணி மேற்கொள்வார்கள் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.