புதுச்சேரி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள்..!

2 Min Read

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை ஒரு பக்கம் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு பக்கம் என மாணவர்கள் சுற்றுலா சென்று வரும் நிலையில்,புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன் மகள்கள் மோகனா வயது (17), லேகா வயது (14). இவர்கள் 2 பேரும் சுப்பிரமணிய பாரதி அரசு பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் 31 ஆம் தேதி புதுச்சேரி கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற போது, இவர்களுடன் அவர்களது குடும்ப நண்பர்களான எல்லை பிள்ளைச்சாவடி முருகையன் மகன் நவீன் வயது (17), அவரது நண்பர் சாரம் பாலாஜி நகர் கிஷோர் வயது (17) ஆகியோர் புதுச்சேரி கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட சென்றனர். இவர்கள் புதுச்சேரியில் சீகலஸ் ஓட்டல் பின்புறம் கடற்கரையில் குளித்து விளையாடிய போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் தகவல் தெரிவித்தனர்.

- Advertisement -
Ad imageAd image
புதுச்சேரி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள்

புதுச்சேரி கடலில் யாரும் குளிக்க கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மீட்பு பணியாளர்கள் மாயமானவர்களை தேடி வந்தனர். அதனை தொடர்ந்து, மாணவி லேகா, அதைத் தொடர்ந்து டிப்ளமோ கேட்டரிங் மாணவரான கிஷோர், பின்னர் மோகனாவின் உடல் மற்றும் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வத்தனர். பரிசோதனை செய்த உடல்களை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒரே வீட்டில் 2 மாணவிகள் பலியானதால் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். இதனிடையே மாயமான பிளஸ் 2 மாணவர் நவீனை தேடும் பணி தொடர்ந்து 3 -வது நாளாக நேற்று நடந்தது.

மீட்பு பணியாளர்கள் புதுச்சேரி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் மீட்பு

இந்த நிலையில் நவீன் உடல் சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச் அருகே உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அரியாங்குப்பம் போலீசார், ஒதியஞ்சாலை காவல்துறை உதவியுடன் மாணவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தைகளை தவித்த சோகத்தில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர்.

Share This Article

Leave a Reply