புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் முதியவர் உள்பட 2 பேரை போலீசார் காவவில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கொடூரமாக கொலை செய்ததை இருவரும் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
அப்போது 2 நாள் விசாரணை முடிந்த நிலையில் இருவரையும் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2 ஆம் தேதி திடீரென மாயமானார். அப்போது 5 ஆம் தேதி மதியம் அவரது வீட்டு அருகே இருக்கும் பாதாள சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அந்த பகுதியை சேர்ந்த கருணாஸ் வயது (19), விவேகானந்தன் வயது (59) ஆகிய இருவரும் சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த முதியவர் விவேகானந்தன், வாலிபர் கருணாஸ் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முத்தியால்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்காக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சோபனாதேவி 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

இதை அடுத்து 2 பேரையும் நேற்று முன்தினம் மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவலில் எடுத்த போலீசார், இருவரையும் கோரிமேடு ஆயுதப்படை மைதானம் அருகிலுள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
அங்கு கிழக்கு எஸ்பி லட்சுமி சவுஜன்யா, சிறப்பு விசாரணை குழு அதிகாரி கலைவாணன் ஆகியோர் 2 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்தது எப்படி?

இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை எப்படி அழைத்து வந்து கொலை செய்தனர் என்பதையும் தத்துரூபமாக நடித்து காண்பிக்க வைத்து வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த விசாரணையில், சிறுமி கொலையில் இதுவரை வெளிவராத சில அதிர்ச்சி தகவல்களை இருவரும் வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது 2 நாட்களிலேயே போலீசார் விசாரணையை முடித்த நிலையில் நேற்று மாலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்தியில் சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.