காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் கொட்டும் கன மழையிலும் குடைகளை பிடித்தவாறு சாலையில் நின்று மறியல் செய்த பொதுமக்களால் பெரும் பரபரப்பு.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஒட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அளிக்கப்பட்டனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பல்லவர் மேடு அருந்ததி பாளையம் என்ற பகுதியில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தேங்கும் கழிவு நீர் கலந்த மழை நீரை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் மேயரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தும், தேங்கி நிற்கும் கழிவு நீர் கலந்த மழை நீரை அகற்ற காஞ்சிபுரம் மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் கழிவு நீர் கலந்த மழை நீர் தேங்கி தொற்று நோய் மற்றும் சுகாதார கேடு ஏற்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மற்றும் மழைநீரை அகற்றாத காஞ்சிபுரம் மேயர் மற்றும் மாநகராட்சியை கண்டித்து கொட்டும் மழையிலும் குடையை பிடித்தவாறு அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு மிகுந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பகுதியில் மழை நீர் தேங்காதவாறு மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.