பொதுப்பாதை மற்றும் பொது கழிப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்த அதிமுக பிரமுகர் மீது உரி நடவடிக்கை எடுக்க கோரியும் , பொது பாதையை மீது தரகோரியும் பொதுநல வழக்கு தாக்கல் .
பொதுப்பாதை மற்றும் பொது கழிப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்த அதிமுக பிரமுகர் , ஆக்கிரமிப்பை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரி வழக்கு. மதுரை மாவட்ட ஆட்சியர் கள நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு .

மதுரை பேரையூர் முத்துநாகையாபுரத்தை சேர்ந்த விஜயா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது : நாங்கள் குடியிருக்கும் பகுதியில் பொதுப்பாதை உள்ளது. அங்கு குடியிருக்கும் பலர், முத்துநாகையாபுரம், பெரியபூலாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பாதையைத் தான் பிரதான பாதையாக பயன்படுத்தி வந்தனர். அங்கு பொது கழிப்பறையும் இருந்தது. இதனையும் பொதுமக்கள் பயன்படுத்தினர்.
இந்தநிலையில். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, மேற்கண்ட கழிப்பறையையும், பொதுப்பாதையையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்து உள்ளனர். மேலும் இந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர். இதனால் 2 கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கழிப்பறையை இடித்துவிட்டு, அந்த இடத்தையும், பொதுப்பாதையையும் தனிநபர் பெயரில் பதிவு செய்தது சட்டவிரோதம். இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து கழிப்பறை, பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பொதுப் பாதையை ஆக்கிரமித்து எவ்வாறு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்த்ரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.