வால்பாறையில் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானை வரவழைக்க பொதுமக்கள் கோரிக்கை

1 Min Read
யானைகள்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.பல நாட்களாக யானைகள் கூட்டம் இந்த பகுதியில் திரிவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் நுழைந்து மக்கள் குடியிருப்பு, பள்ளி, சத்துணவு கூடம் ஆகியவற்றை சேதப்படுத்தியும் வருகிறது. அதேபோல நேற்று நள்ளிரவு ஸ்டேன்மோர் கொய்யா மரத்துப்பாடி பகுதியில் நுழைந்த 17 யானைகள் கொண்ட கூட்டம் அங்குள்ள சாந்தகுமாரி, சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டிடை உடைத்து உள்ளே புகுந்து வீட்டிலிருந்த கிரைண்டர்,மிக்ஸி, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியே இழுத்துத்தள்ளி சேதப் படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
சேதமடைந்த வீடு

இச்சம்பவத்தின் போது தனது மகன் வீட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றிருந்தால் தகவலறிந்து இன்று காலை வீட்டை வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ஜேபி ஆர் என்ற பாஸ்கர் ஆகியோர் சம்பவப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்கினர் மேலும் வால்பாறை சுற்று வட்டார மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கும்கி யானைகளை வரவழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகளை மட்டுமல்லாமல் விளைநிலங்களையும் காட்டு யானைகள் கூட்டம் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.அரசு யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.வால்பாறை பகுதியில் யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மழைக்காலம் தொடங்கும் இந்த நேரத்தில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

Share This Article

Leave a Reply