விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும் எனக் கோரி தஞ்சையில் அவ்வை பண்பாட்டு இயக்கத்தினர் மோடி, ராகுல் காந்தி , ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படத்தை முகமூடியாக அணிந்து கொண்டு கையெழுத்து இயக்கம் துவங்கினார்கள்.
தஞ்சையில் அவ்வை பண்பாட்டு இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது , இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவ்வை பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பாளையங்கோட்டை ஐயா .

“இந்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை மானிய விலையில் லிட்டர் 55 ரூபாய்க்கும் டீசல் லிட்டர் 45 ரூபாய்க்கும் எந்த வித வரியும் இல்லாமல் மீனவர்களுக்கு வழங்குவதுபோல் நாடு முழுவதும் உள்ள அத்தனை விவசாயிகளுக்கும் பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் .
மரியாதைக்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை இறக்குமதி விலைக்கு வழங்க வேண்டும் அவ்வாறு வழங்கினால் மட்டும் தான் விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்றார்.
விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருக்கிறார்கள் அதானி – அம்பானிக்கு 60 ரூபாய் வரி போடலாம் ஆனால் ஏழை விவசாயிகளுக்கு 60 ரூபாய் வரி போடக்கூடாது
அதானி அம்பானி வெளிநாட்டு மக்களுக்காக உழைக்கிறார்கள் ஆனால் விவசாயிகள் உள்ளூர் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்கிறார்கள் , எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் எனக்கோரி தஞ்சையில் கையெழுத்து இயக்கம் துவங்கியிருக்கிறோம் ” என்றார்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நான்கு பேர் முடிவு எடுக்க முடியும் அதில் முதலாவதுதாக பார்த்த பிரதமர் நரேந்திர மோடி , பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி , தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ் நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நான்கு பேரின் கவனத்தை விவசாயிகள் பக்கம் திருப்புவதற்காக அவர்களுடைய படத்தை முகமூடி அணிந்து இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார்.
அவ்வை பண்பாட்டு இயக்கத்தினரின் இந்த நூதன போராட்டம் தஞ்சை மாவட்டத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றது .
Leave a Reply
You must be logged in to post a comment.