தூத்துக்குடி, முறப்பநாடு அருகே VAO லூர்து பிரான்சிஸ் கொலை தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது,”கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாக வருகிற 28ஆம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கழகப் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் கைதான இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.