சொத்து பிரச்சனை : தாயை கத்தியால் வெட்டிய மூத்த மகன் – நடந்தது என்ன..!

1 Min Read

விழுப்புரம் மாவட்டம், அடுத்த கண்டாச்சிபுரம் அருகே சொத்து தகராறில் தாயை கத்தியால் வெட்டிய மூத்த மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், அடுத்த கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாச்சி கிராம பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது (65), ஆகாசவாணி வயது (60) தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தாயை கத்தியால் வெட்டிய மூத்த மகன்

இவர்களது மூத்த மகன் அருள் அய்யப்பன் வயது (32), இளைய மகன் அரி வயது (30), கிருஷ்ணமூர்த்தி -ஆகாசவாணி தம்பதியினருக்கு மொத்தமாக 120 சென்ட் நிலம் உள்ளது.

அதில் 70 சென்ட் நிலத்தை இளைய மகன் அரியிடம் 5 வருடங்களுக்கு முன்பு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இளைய மகன் அரி மொத்தமாக 120 சென்ட் நிலத்தில் தாய் தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை

அதில் வரும் வருமானத்தால் அரி மற்றும் தாய் தந்தை முழுவதுமாக எடுத்து கொள்வதாக கூறியும், அதனை பலமுறை கேட்டும் தரவில்லை என அருள் அய்யப்பன் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதில் நேற்று குடும்பத்தினருடன் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அருள் அய்யப்பன் அவரது தாயை கத்தியால் தலையிலும், இடது கையிலும் வெட்டியுள்ளார்.

கண்டாச்சிபுரம் காவல் நிலையம்

இதனை பார்த்த குடும்பத்தினர் தாய் ஆகாசவாணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மூத்த மகன் அருள் அய்யப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply