திருப்பத்தூர் அருகே சொத்து தகராறு தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கீழே தள்ளும் மகன் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த நாட்றம்பள்ளி அருகே ஜங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு 82 வயதான இவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது சொத்துக்களை இரு மகன்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுத்த நிலையில்,

மேலும் அவரது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை தனக்கு வேண்டும் என கூறி மூத்த மகன் மார்க்கபந்தீஸ்வரன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது தந்தைக்கு தெரியாமல் தாயாரை அழைத்து சென்று தனது பெயரில் சொத்துக்களை பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தனது மனைவி பெயர் உள்ள சொத்துக்களை தனக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்து கொண்ட மூத்த மகனை தட்டி கேட்டதால் 82 வயது முதியவர் எனவும் பாராமல் தனது சொந்த தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கீழே தள்ளி கொலைவெறி செயலில் ஈடுபட்டுள்ளார் மார்க்கபந்தீஸ்வரன்.
அதில் எலும்பு முறிவு மற்றும் பலத்த காயம் அடைந்த முதியவர் அப்பாவுவை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து முதியவர் அப்பாவு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மார்க்கவந்தீஸ்வரர் உள்ளிட்ட 4 பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.