நீலகிரி, கோவை, மைசூர், பெங்களூர் நகரங்களை இணைக்க டனல் மூலம் சாலை அமைக்க தங்களிடம் மிஷன் உள்ளது மத்திய இனை அமைச்சர் எல். முருகன் மேட்டுப்பாளையத்தில் பேச்சு.
கோவை மாவட்டம், அடுத்த மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அனைத்து இந்து சமுதாய நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்கும் கூட்டம் நந்தவனம் பகுதியில் நடைபெற்றது.

அதில் மத்திய இனை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல். முருகன் கலந்து கொண்டு நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன் கோவை மாநகர் வளர்ச்சி அடைந்த போதும் ஆட்சியாளர்களின் மெத்தனம் காரணமாக மேட்டுப்பாளையத்தில் வளர்ச்சி ஏதும் இல்லை.

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை ரயில் பாதை திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
அப்போது சுற்றுலா தளமான உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கைவிடபட்ட பைபாஸ் சாலை திட்டம் கொண்டு வரப்படும் மேட்டுப்பாளையம் அவிநாசி சாலை நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அத்துடன் வட கிழக்கு மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளது போல் டனல் மூலம் சாலை அமைத்து தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ள கோவை சுற்றுலா பகுதியான நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவின் மைசூர், பெங்களூர் நகரங்களை இணைக்கும் தங்களிடம் மிஷன் உள்ளதாக பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.