உலகின் நிலப்பரப்பில் வெறும் 2.4% நிலப்பரப்பை கொண்டதே இந்தியா.ஆனால், 30,000 யானைகளுடன் உலகின் மிகப் பெரிய ஆசிய யானைகள் வாழும் நாடும் இந்தியா தான். ஏறக்குறைய 3000 காண்டாமிருக எண்ணிக்கையுடன் உலகின்மிகப்பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருக நாடாகவும் உள்ளது இந்தியா.
மைசூருவில் உள்ள கர்நாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘புரொஜக்ட் டைகர்’ திட்டத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது, இந்தியாவில் புலிகளின் சமீபத்திய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அதன் எண்ணிக்கையை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
மேலும் பேசுகையில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது நாட்டிற்க்கே பெருமைகுறிய விஷயமாகும் என்றார். பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது.

இந்த விஷயத்தில் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்வோம். நாங்கள் புலிகளை மற்றும் காப்பாறவில்லை அதற்கேற்ப்ப அதன் சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். இயற்க்கையை பாதுகாப்பது நம் வாழ்வின் ஒர் அங்கமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளை பாதுகப்பது ஒரு நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு உலகளாவிய நன்மை பயக்கும் விஷயமாகும். அழிந்து போன சிவிங்கிப் புலிகளை பல ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்க்கு கொண்டு வந்துள்ளோம்.
நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று புலிகளின் எண்ணிக்கை 75% தாண்டியுள்ளது பெருமைக்குறிய ஒன்றாகும்.இது 10-12 ஆண்டுகளில் வந்த வளர்ச்சி. உலகின் நிலப்பரப்பில் வெறும் 2.4% நிலப்பரப்பை கொண்டதே இந்தியா.
ஆனால், 30,000 யானைகளுடன் உலகின் மிகப் பெரிய ஆசிய யானைகள் வாழும் நாடும் இந்தியா தான். ஏறக்குறைய 3000 காண்டாமிருக எண்ணிக்கையுடன் உலகின்மிகப்பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருக நாடாகவும் உள்ளது இந்தியா. இது போன்று புள்ளி விவரங்களை ஒவ்வொன்றாக அடுக்கிய பிரதமர் மோடி அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் இரண்டிற்க்கும் சமமான முக்கியத்துவத்தை தந்து வருகிறோம் என்றும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், வனம் பருவ நிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.