கோவை மத்திய சிறைக்குள் தடை செய்யப்பட்ட கொடி – கைதியிடம் விசாரணை..!

2 Min Read

பேப்பரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடியினை வரைந்து வைத்து இருப்பது தெரியவந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவரிடம் சிறைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சில சம்பவங்கள் மத்திய சிறையில் நடப்பது வழக்கம்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மத்திய சிறைக்குள், பேனாவால் பேப்பரில் வரையப்பட்ட ISIS அமைப்பின் தடை செய்யப்பட்ட கொடியினை கைதான ஆசிப் முஸ்தகின் என்பவரிடம் இருந்து சிறைகாவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். ஆசிப் முஸ்தகின் சிறை காவலரை மிரட்டியதால் அவர் மீது சட்ட விரோத செயல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ISIS அமைப்பு

ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் வயது (30). இவர் ISIS ஆதரவாளர் என்பது தெரியவந்த நிலையில், ஈரோடு போலீசார் அவரை UAPA சட்டத்தில் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். இந்த நிலையில் கோவை மத்திய சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி மத்திய சிரையில் பல அறைகளை சோதனை செய்த வகையில் ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்ட போது, அங்கு மடித்து வைக்கப்பட்டிருந்த அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரை கைபற்றினார். அதில் ISIS அமைப்பின் தடை செய்யப்பட்ட கொடியினை வரைந்து வைத்து இருப்பது தெரியவந்த நிலையில், அந்த கொடியினை கைபற்றியதுடன், சிறை குறிப்பேடுகளில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.

எப்படி வந்தது சிறைக்குள் பேப்பர் என்றால் நீதிமன்றத்திற்கு மனுக்களை எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட பேப்பர், பேனாவில் ISIS அமைப்பின் கொடிகளை வரைந்து இருப்பதும், இது இஸ்லாமிய அரசின் கொடி, இந்த கொடியை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் ஆசிப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜெயிலர் சிவராஜன் சிறை வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, விரைவில் சிறையிலிருந்து வெளியேறுவேன்.

UAPA சட்டத்தில் கைது

அப்போது ISIS அமைப்பிற்காக ஜிஹாத் வேலையைத் தொடர்வேன் எனவும், அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து ஜெயிலர் சிவராஜன் கொடுத்த புகாரின் பேரில் ISIS ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீது மீண்டும் UAPA சட்டம், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆசிப்பிடம் இருந்த கைபற்றபட்ட பேப்பர் கொடியினையும் போலீசாரிடம், ஜெயிலர் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் கோவை காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply