கன்னியாகுமரி மாவட்டத்தில் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் அவர் தனது ட்விட்டர் பதிவில், “கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே தீடிரென்று அந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை விசாரணை மேற்கொண்ட பொழுது மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த அந்த மாணவி கையில் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் ஒன்று வெளியாகியுள்ளன.
மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உயிரிழந்த மாணவியின் தந்தை,தாய் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர் என கூறப்படுகிறது.

எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி,போலிசார் கூரியது சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மேலும் கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.