கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், கோவை மத்திய சிறையில் இருந்து தப்பியோடியதாக தகவல் கூறப்படுகிறது.
கோவை மத்திய சிறையில் பணியில் இருந்த போஸ்கோ கைதி தப்பி ஓடியதாக தகவல் பரவி வருகிறது. பாலியல் புகார் தொடர்பாக கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு தொடரப்பட்டு, விஜய் ரத்தினம் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. கோவை மத்திய சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளுக்கு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டீக்கடை, சலூன் கடை, பெட்ரோல் பங்க் போன்றவற்றில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கைதிகள் அவர்களுக்கான வருவாயை ஈட்டி கொள்கின்றனர்.

அந்த வகையில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த விஜய் ரத்தினத்திற்கு கோவை மத்திய சிறை நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் இரவு நேர பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சக கைதிகளுடன் விஜயரத்தினம் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அனைத்து கைதிகளுக்கும் வேலை நேரம் முடிந்த நிலையில் அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக போலீசார் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளனர்.
மேலும் பணியில் இருந்தவர்களின் எண்ணிக்கையை எண்ணி பார்க்கும் போது ஒரு கைதி குறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் விஜய ரத்தினத்தை காணவில்லை என்று தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவருடன் பணியாற்றிய சக கைதிகளை விசாரணை செய்ததில் காலை சுமார் 5:30 மணியளவில் இருந்து அவர் காணவில்லை என தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தப்பி சென்ற கைதி விஜயரத்தினம், சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காந்திபுரம் பேருந்து நிலையம் முழுவதும் சல்லடை போட்டு காவல்துறை தேடினர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.