சங்கரன்கோவில் அருகே சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களில் தங்கசாமி என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் ஐந்தாவது நாளாக உடலை வாங்க மறுப்பு. இறந்த தங்கசாமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாக உடற்கூறு ஆய்வில் தகவல் வெளியான நிலையில் தற்போது காயங்கள் இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க சாமி கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் மூதாட்டி முப்பிலி மாடத்தி மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர் இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் முப்பிலி மாடத்தின் மூதாட்டியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் மூதாட்டியின் பெட்டி கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கசாமி இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் இதனை அடுத்து இருசக்கர வாகனத்தை கேட்டுச் சென்ற தங்கசாமியை மது விற்பனைக்கு உடனடியாக இருந்ததாக கூறியும் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறியும் தங்கசாமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தங்கசாமிக்கு பாளை மத்திய சிறையில் உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறி புளியங்குடி காவல் துறையினருக்கு சில நாட்களுக்கு முன்பு சிறை நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது…
இதனைத் தொடர்ந்து புளியங்குடியில் தங்கசாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர் இந்த நிலையில் அவரது உறவினர்கள் ஐந்து நாட்களாக உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
தற்போது தங்கசாமியின் தங்கசாமியின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதாக உடற்கூறு ஆய்வில் அறிக்கையில் வெளியாகி உள்ளதாகவும் இதனால் தங்கசாமியின் மரணம் காவல் துறையினர் தாக்கியதன் காரணமாகவே நடந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்…
எனவே தங்கசாமியின் இறப்பிற்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்கசாமியின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த தங்கசாமியின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்…
இச்சம்பவத்தால் புளியங்குடி பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…
Leave a Reply
You must be logged in to post a comment.