போக்ஸோ கைதி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்…

1 Min Read
சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் தப்பி ஓடிய சிறை கைதி

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா வயது (44). தினக்கூலி கடந்த 2022 ம் ஆண்டு பாலியல் வழக்கில் வாணியம்பாடி போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image

ராஜாவுக்கு கடந்த 13-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுக்கம்பாறைஇல் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  இருந்த நிலையில் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் அவருடைய உறவினர்களிடம் தஞ்சம் புகுந்து இருப்பதாக சக கைதிகளிடம் இருந்து தகவல் அறிந்த  போலீசார் மற்றும் தனிப்படையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு சித்தூருக்கு சென்று பல்வேறு இடங்களில் ராஜாவை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை ராஜா சித்தூர் பஸ்நிலையம் அருகே ஒரு ஆட்டோவில் செல்ல  முயன்றார். இதைக்கண்ட தனிப்படையினர் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து வேனில் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சம்பவம் நடந்த நாளன்று கண்ணமங்கலம்  பகுதியில் பதுங்கி இருந்து, இரவில் ஆந்திரா செல்லும் பஸ்சில் ஏறியதாக தெரிவித்தார். இதையடுத்து ராஜா மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Share This Article

Leave a Reply