திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான சுரபி நர்சிங் கல்லூரியில் தாளாளர் ஜோதி முருகன் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 19.11.21 அன்று தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோதி முருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இது தொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் ஜோதி முருகன் என்பவர் தாளாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகின்றது.தாடிக்கொம்பு போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோதி முருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்கள்.
மேலும் இது தொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி இன்று ஜோதி முருகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்வி கற்க்கும் இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை அரசும்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏற்படுத்தி வரும் நிலையில் சில சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன.போக்சோ வழக்குகள் தீவிரப்படுத்தப்பட்டு தண்டனைகள் விரைந்து வழங்கப்பட்டும் வருகிறது.இருந்தாலும் போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
திண்டுகல்லில் நடந்த இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களுக்கு பெண் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அரசு இது போன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.