பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளுக்கு கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதியாக வழங்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சிப்பதை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
பல்லடம் அருகே உள்ள அவிநாசி பாளையம் அழகுமலை பிரிவில் நடைபெற்றது. அப்போது 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான மாநாடாக திருப்பூர் மாவட்டம், அடுத்த பல்லடம் மாதப்பூரில் நடைபெற்றது. அதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்ற உள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் மதியம் நடைபெறுகிறது. அதில், பிரதமா் மோடி பங்கேற்று அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறாா்.

மேலும் மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். சென்னையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை பாஜக ஆட்சிக்கு வந்தும் இதுவரை நிறைவேற்றவில்லை.

அப்போது விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சிப்பதாகவும் கூறி மோடியின் வருகை எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தியும் கருப்பு பலூன்களை பறக்க விட்டும் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்லடம் அருகே பொங்கலூர் அவிநாசி பாளையம் அழகுமலை பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு ஏற்கனவே தயாராக இருந்த போலீசார் அவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.