மேற்கு வங்க மாநிலம், அடுத்த சந்தேஷ்காலியில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், நிலங்களை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

அந்த பகுதியை சேர்ந்த ரேகா பத்ராவை பாசிர்ஹாத் தொகுதி வேட்பாளராக பாஜக களமிறக்கி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி, வேட்பாளர் ரேகா பத்ராவுக்கு நேற்று போன் செய்து பேசினார்.

அப்போது சந்தேஷ்காலி பகுதியில் பெண்களுக்கு ஏற்படும் துயரங்களை பிரதமர் மோடியிடம் கூறிய ரேகா பத்ரா, பாஜக வேட்பாளர் என்பதால் ஆரம்பத்தில் தன்னை பலர் எதிர்த்ததாகவும் கூறினார்.

மேலும் ஏழ்மையான குடும்பம் என்பதால் தனது கணவர், தமிழ்நாட்டில் வேலை பார்ப்பதாகவும் கூறினார். அவருக்கு ஊக்கமளித்த பிரதமர் மோடி, ‘‘மக்கள் மத்தியில் பணியாற்றுங்கள். திரிணாமுல் காங்கிரசின் ஊழலை அம்பலப்படுத்துங்கள். அப்போது சக்தியின் சொரூபம் நீங்கள்’’ என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.