இந்தியாவில் பின் தங்கிய மக்களின் வளர்ச்சியில் பிரதமர் ஆர்வமாக உள்ளார், என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
பிரதம மந்திரியின் மலைவாழ் பழங்குடியினர் நலன் காக்கும் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு, இலவச வீடு கட்டும் முதல் கட்ட நிதியை, பிரதமர் மோடி நேற்று வழங்கினார். இந்த திட்டம் குறித்து மலைவாழ் மக்களிடம் காணொலியில் உரையாடினார். இந்த நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்டம், கூடலுார் ஸ்ரீ மதுரை ஊராட்சி, மண்வயல் சமுதாய கூடத்தில், பழங்குடி மக்கள் காணொலியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பழங்குடியினருடன் அமர்ந்து, மத்திய தகவல் வழங்கி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் நிகழ்ச்சியை பார்த்தார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்று, 50 பயனாளிகளுக்கு, 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சர் முருகன் கூறிய தாவது;- மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக, ‘ஜன்மன்’ திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பழங்குடி மக்களின் அடிப்படை வசதிக்காக, 24,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில், ஒரு லட்சம் பழங்குடி மக்கள் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி, அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ‘நாடு வளர்ச்சி அடைய, பின் தங்கிய மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும்’ என்பதை பிரதமர் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். பிரதமர் தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டுள்ளார். டில்லியில் உள்ள என் வீட்டில் நடந்த பொங்கல் விழாவை, தமிழ் கலாசாரத்துடன் கொண்டாடினார். காசி தமிழ் சங்கமம் இரண்டு முறையும், சவு ராஷ்டிரா தமிழ் சங்கமம் ஒரு முறையும் நடத்தப்பட்டுள்ளது.
பாரதியாருக்கு கணக்கில் பெருமை சேர்க்கும் வகையில், ஹிந்து பனாரஸ் பல்கலையில், அவருக்கு வளர்ச்சி சிறப்பு இருக்கை அமைத்துள்ளார். இந்த திருக்குறளை, 35 வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு முருகன் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.