நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் – ஜனாதிபதி திரௌபதி முர்மு..!

2 Min Read

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

- Advertisement -
Ad imageAd image

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்கள் தான் தற்போதும் நடைமுறையில் இருக்கின்றன. அந்த சட்டங்கள் அடிப்படையில் தான் குற்ற செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கிடையே தற்காலத்துக்கு ஏற்ற வகையில் அந்த சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சட்ட மசோதா, பாரதிய சாட்சியங்கள், சட்ட மசோதா ஆகிய மூன்று குற்றவியல் மசோதாக்களை மத்திய அரசு உருவாக்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.

ஜனாதிபதி திரௌபதி முர்மு

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் சமீபத்திய காலத்தில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் வாபஸ் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து, நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். இந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் 3 குற்றவியல் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும் மறுநாள் 21 ஆம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் அவை நாடாளுமன்ற ஒரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டன. பின்னர் 3 மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது 3 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதனால் அம்மசோதாக்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. முன்னோர் காலத்தில் ஆங்கிலேயர் காலச் சட்டங்கள் ஒழிந்து, புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வர வழி பிறந்துள்ளது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு

இதனால் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு முதல் முறையாக பாரதிய நியாயக் சட்டத்தில் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் அச்சொல்லுக்கு வரையறை கூறப்படவில்லை. இதனை பிரிவினை வாத செயல்பாடுகள் ஆயுதப் புரட்சி நாட்டின் இறையாண்மைக்கு எதிரான காரியங்கள் ஆகியவற்றுக்கு ஆயுள் தண்டனையோ? அல்லது ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ? என்ற அபராதத்துடன் விதிக்கப்படும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பழைய சட்டத்தில் இருந்த ராஜ துரோகம் என்ற வார்த்தை தற்போது புதிய சட்டத்தில் தேச துரோகம் என்று மாற்றப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply