ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய் மின் வாரிய சங்கம் கோரிக்கை

1 Min Read

தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

25 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து கொரோனா உள்ளிட்ட அனைத்து பேரிடர் காலங்களிலும் உழைத்து, விபத்தில் உடல் உறுப்புகள் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு எந்தவித பணிப் பலன்கள் இல்லாமல் தமிழ்நாடு மக்களுக்காக அனைத்து மின் களப்பணிகளை செய்த ஒப்பந்த ஊழியர்களின் உழைப்பிற்கு உரிய மரியாதை செலுத்தாமல் அதனை வாரிய தலைமைக்கும் தெரிவிக்காமல் மறைக்கும் மின்வாரிய கீழ்மட்ட அதிகாரிகளை கண்டித்து ஒப்பந்த ஊழியர்களின் குறைகளை அரசுக்கும்,நிர்வாகத்திற்கும் எடுத்து சொல்லுமாறு தான் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் ரத்து செய்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு கள உதவியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
மின்வாரிய உற்பத்தியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் .
மின்வாரியத்தில் பகுதி நேர பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
புயல் மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தைரியமாக முன்வந்து களப்பணிகளை செய்து மக்கள் குறைகளை தீர்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்திற்கு நிறுவனர் பொதுச் செயலாளர் கொளத்தூர் ஜி சரவணன் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் செங்கை சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றும் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் அது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தலைவர் செயலாளர் பொருளாளர் உடன் ஆலோசனை மேற்கொண்டனர் உறுப்பினர்களும் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

Share This Article

Leave a Reply