தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பகுதியில், “நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட பாஜக சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களையும் மேட்டுப்பாளைய மக்களையும் 4ஆம் தேதி நமது நடைபயணத்தின் போது சந்திக்க ஆவலுடன் உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.