உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி..!

3 Min Read
உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வில், பொன்முடி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது.

- Advertisement -
Ad imageAd image

அதில் பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அபிஷேக் மனு சிங்வி, தனது வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பினை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராவதற்கான வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். வாய்ப்புள்ளதாக கூறும் வழக்கறிஞர்கள் எம்.பி ராகுல் காந்தியின் வழக்கை சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி முதலில் தனது மக்களவைப் பதவியை இழந்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்த நிலையில் அவரது தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இதன்பின் அவரது மக்களவை உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

எனவே, அதேபோல் பொன்முடிக்கும் மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 – 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர்மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் வரையில் சொத்துக்கள் இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை.

உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

எனவே குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என கூறி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த 2017-ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இறுதிக்கட்ட வாதங்களுக்குப் பிறகு தண்டனை விவரங்களை டிசம்பர் 21-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய எதுவாக, சரணடைய 30 நாட்கள் கால அவகாசம் அளிப்பதாகவும் அதனை மீறினால் காவல்துறைனர் கைது செய்யவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

அதன்படி அவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன் முடிவில் (ஜனவரி 12-ம் தேதி) பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர் பொன்முடி பொறுப்பில் இருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டு திருக்கோவிலூர் தொகுதி காலிதொகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பினை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது.

Share This Article

Leave a Reply