கூத்தக்குடி அருகே உள்ள வனக்காட்டு பகுதியில் ஜெகன்ஸ்ரீ யை கொலை செய்து புதைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் அந்த பகுதியி தோண்டிப்பார்த்த போதுசடலம் இருந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்- செந்தமிழ்ச்செல்வி இவர்களது மகன் ஜெகன் ஸ்ரீ தொழுதூர் அருகே தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் முதல் இவரைக் காணவில்லை என்று பெற்றோர்களும் உறவினர்களும் பல இடங்களில் தேடி வந்த நிலையில் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் அருகில் உள்ள நீர்நிலைகள் வனப்பகுதிகளுக்குள்ளும் அலைந்து திரிந்து தேடியுள்ளனர். என்ற போதிலும் பாலிடெக்னிக் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கூத்தக்குடி அருகே சமத்துவபுரம் பகுதியில் நான்கு இளைஞர்கள் போதையில் தாங்கள்தான் ஜெகன்ஸ்ரீ யை கொலை செய்தோம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட சிறுவன் ஓடிவந்து அங்கு இருந்த இளைஞரிடம் கூறியுள்ளான். உடனடியாக அந்த இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தர அந்த நால்வரையும் போலீசார் உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூத்தக்குடி அருகே உள்ள வனக்காட்டு பகுதியில் ஜெகன்ஸ்ரீ யை கொலை செய்து புதைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் கொலை செய்து புதைத்திருக்கும் இடத்தையும் காட்டினர். அதன்படி போலீசார் அந்த பகுதியி தோண்டிப்பார்த்த போதுசடலம் இருந்துள்ளது.பின்னர் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்து நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் போலீசார். காணாமல் போன கல்லூரி மாணவன் வனப் பகுதியில் பிணமாக புதைக்கப்பட்ட செய்தி கூத்தக்குடி கிராமத்தை மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி மாவட்டத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவே இக்கொலைக்கு முக்கிய காரணம்.என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.