பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதி மோதி உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்.
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

சொந்த வேலை காரணமாக சின்னாம்பாளையம் வந்தவர் இன்று பிற்பகல் பொள்ளாச்சி – உடுமலை சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சாலையை கடந்து அங்குள்ள மளிகை கடைக்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நீதிபதி கருணாநிதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் உயிரிழந்த நீதிபதி கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி யார் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,
விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கஞ்சம்பட்டி கே. நாகூரைச் சேர்ந்த வஞ்சிமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி இருந்து விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நீதிபதி கருணாநிதி சாலையை கடந்து வருகிறார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
அதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததும் விபத்தை ஏற்படுத்திய வஞ்சிமுத்து அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.