இசையமைப்பாளர், பாடகி பவதாரணி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

2 Min Read

இசைஞானி இளைராஜாவின் மகளான, இசையமைப்பாளர் மற்றும் பாடகி பவதாரிணி மறைவையொட்டி பல அரசியல் கட்சியினர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறன. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், பவதாரணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது இனிய குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரிணி, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும் எனக் கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனித்துவம் வாய்ந்த குரலால் தனித்து நின்றவர். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தரசன் இந்திய கம்யூ. மாநில செயலாளர் பவதாரிணி தனது தனித்த முயற்சியாலும் திறமையாலும் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகியாக இருந்தவர்.

பாடகி பவதாரணி மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்

அவரது மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலுக்கு சிறு வயதிலேயே தேசிய விருதை வென்றவர். பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடல்களை பாடியுள்ளார். இவரது இனிய குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த உலகில் என்றார். திருநாவுக்கரசர் காங்கிரஸ் எம்பி, பவதாரிணி சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றவர். அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். மகளை இழந்து வாடும் சகோதரர் இளையராஜா தாங்க முடியாத இந்த துயரத்தில் இருந்து மீள வேண்டிய சக்தியை தர வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

ஜி.கே.வாசன் த.மா.கா. தலைவர், தனித்துவமான இனிய குரல்வளத்தால் பல பாடல்களைப் பாடி ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். திமுக இளைஞர் அணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவின் மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி, உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது இழப்பு பேரிழப்பாகும். பவதாரிணியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தார்-நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாடகி பவதாரணி மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்

அவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெற்ற பெருமைமிக்கவர். இசையமைப்பாளராக பல படங்களுக்கு பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது. திருமாவளவன் விசிக தலைவர்,
டி.டி.வி.தினகரன் அமமுக பொதுச்செயலாளர், பிரேமலதா தேமுதிக பொதுச்செயலாளர், சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆகியோர் அவர் குடும்பத்திற்கு அவர்களது ஆறுதலையுல் இரங்களையும் தெரிவித்து வருகிறனர்.

Share This Article

Leave a Reply