தக்காளி சந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு.24 மணி நேரமும் பாதுகாக்கும் போலீஸ்.

1 Min Read
போலிஸ் பாதுகாப்பு

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி இந்துயாவில் வசிக்கும் அனைத்து மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அத்தியாவிசிய உணவுப்பொருள் தக்காளி.தற்போது தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்து இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.இதை கட்டுப்படுத்த வேண்டுய அரசுகளும் இப்படி பொறுமை காப்பது மக்களை மேலும் கவலையடைய செய்கிறது.சாதாரணமாக பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படும் தக்காளி இந்த ஆண்டு மட்டும் ஏன் இப்படி ஆனது என்ற காரணம் இன்னமும் தெரிவில்லை.

- Advertisement -
Ad imageAd image

மேலும் தக்காளியை பதுக்கி இன்னும் சிலர் கூடுதல் விலைக்கு விற்பது அதை விட கொடுமை.தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து தக்காளி திருடர்களின் அட்டகாசம் அதிகமாகியுள்ளது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கண்ணில் எண்ணெய் விட்டு தக்காளிக்காக நிலத்திலும் மற்றும் மண்டிகளிலும் காவல் காத்திருக்கின்றனர்.ஒரு சில நாட்களில் தக்காளி விலை குறைந்து விடும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

தக்காளி சந்தை

இப்படியே போனால் மக்களின் பொருளாதார நிலை கேள்விக்குள்ளாகி விடும்.இந்த நிலையில் தக்காளியை பாதுகாப்பது பெரும் வேலையாக உள்ளது அரசுகளுக்கு.

இந்த நிலையில் தக்காளியை பாது காக்கும் விதமாக கர்நாடக மாநிலம்  கோலார் மாவட்ட மார்க்கெட்டில் தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தக்காளி மார்க்கெட் இது தான் இங்கு தான் உள்ளது.இங்கு  தக்காளிக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்து கோலார் காவல் கண்காணிப்பாளர் நாராயண் தகவல் தெரிவித்துள்ளார். 15 கிலோ எடையுள்ள ஒரு கிரேட் 1800 முதல் 2200 ரூபாய் வரை ஏலம் விடப்படுகிறது.ஏலம் எடுப்பதி ஏதாவது பிரச்சனை ஏற்ப்பால் தக்காளி விலை இன்னும் கூடுதலாகி விடும்.அதை கட்டுப்படுத்தும் விதமாகவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிறார்.

Share This Article

Leave a Reply