கோவை சரவணம்பட்டி காவல் நிலைய புலனாய்வு பிரிவில் பணி புரியும் தலைமை காவலர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை சரவணம்பட்டி காவல் நிலைய புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணி புரிந்து வரும் பாலகுமார்.இவர் கோவை கணபதி பகுதியிலுள்ள வேளாண்ங்கண்ணி நகரில் மனைவி சுமதி , மகன் சாய் அபினவ் , சாய் அக்ஷதா ஆகியோருடன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இன்னிலையில், மனைவி சுமதி கடந்த 15 நாட்களுக்கு முன்பு சி2 பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேஸ் கோர்ஸில் உள்ள தாஜ் வின்டா ஹோட்டல் மூலமாக லண்டன் தாஜ் வின்டா ஹோட்டலுக்கு பணிக்காக சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் பள்ளி விடுமுறையில் சேலத்தில் உள்ள அவரது மாமியார் ஜெயமணி வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.அவர்கள் இருவரும் மாமியார் உடன் தங்கி உள்ளனர்.
தனது மனைவி வேலைக்கு செல்வதில் பாலகுமாருக்கு விருப்பமில்லை போல் தெரிகிறது.அதனைத் தொடர்ந்து நேற்று இரவு பக்கத்து தெருவில் குடியிருக்கும் பாலகுமார் தந்தை சண்முகம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பாலகுமார் தொலைபேசி எடுக்காததால் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு பாலகுமார் பணிக்கு வந்துள்ளாரா என கேட்டுள்ளார். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து சந்தேகமடைந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு பயிற்சி உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் தலைமை காவலர் மணிகண்டன் ஆகியோர் மேற்கண்ட வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்த நிலையில் பல முறை கதவை தட்டிப்பார்த்தனர் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
அதனை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த போது படுக்கை அறையில் தொட்டில் ஊக்கில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து கதவை உடைத்து உள்ளே சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனது விருப்பமில்லாமல் மனைவி பணிக்கு சென்றாரா? இல்லை கணவன் மனைவி இடையே வேறு ஏதாவது பிரச்சனையா என்ற கோனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.