போலீஸ் என்றாலே அம்பாசமுத்திரம்,நெல்லை சம்பவங்கள் தான் நினைவுக்கு வரும்.மக்கள் பார்வையில் போலிசாருக்கு இந்த சம்பவங்கள் தான் நினைவுக்கு வரும்.இந்த நிலையில் கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைக்கிறது. கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் ஒருவர் வைத்திருந்த கைக்குழந்தையை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும் தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார்.அப்போது இளம் பெண் வெயிலின் தாக்கத்தால் அப்பெண் அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து நின்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கிஷோர்குமார் இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை வாங்கி கொண்டு, இளம் பெண்ணை அங்கிருந்த இருக்கை அமரக்கூறியதோடு தண்ணீர் வாங்கி கொடுத்துள்ளார்.இதையடுத்து அவரது தாய் வாங்கி வந்த உணவை சாப்பிடும் வரையிலும் சுமார் 20 நிமிடங்கள் குழந்தையை காவலர் கிஷோர்குமார் தூக்கி வைத்திருந்தார்.கடும் வேலைக்கு இடையே போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.