தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் ஆளூநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசையும், ஜனநாயக இயக்கங்களையும் எதிர்த்து பேசி வருகிறார். அரசமைப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
சிதம்பரம் குழந்தை திருமணம் குறித்து தவறான செய்தி வெளியிடுவது, தமிழக முதல்வரின் முதலீட்டுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறர்களில் ஈடுபட்டு வருகிறார்.
சுரண்டல் ஒடுக்குமுறைக் கொள்கைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டெடுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பது, உயிரினித்தின் பரிணாம வளர்ச்சியை குறிப்பிடும் டார்வின் தத்துவத்தை திரித்து கூறுவதாக செயல்படுகிறார்.
தமிழகத்தில் ஆளூநர் செல்லுமிடங்களில் கருப்பு கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தமிழக மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதன் கிழமை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆளூநர் வந்தார்.
வடலூரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை கடலூர் வழியாக சென்னை செல்வதாக இருந்தது.
ஆளூநருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இயக்கம் நடத்திட அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே கருப்பு கொடி காட்டுவதற்காக இன்று மாலை அனைத்து கட்சிகளும் திரண்டனர்.
இதனை அடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல் போராட்டமாக மாறியது.
இதனால் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் ஏ.எஸ். சந்திரசேகரன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துணை மேயர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அருள்பாபு, தண்டபாணி மக்கள் அதிகார பொறுப்பாளர் பாலு, ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஷெக்தாவுத், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைதானார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.