மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பா.ம.க. 10 தொகுதிகளில் களம் காண்கிறது.
திண்டுக்கல் – ம.திலகபாமா
அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி – அ.கணேஷ் குமார்
கடலூர் – தங்கர் பச்சான்
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ் உடையார்
தருமபுரி – சவுமியா அன்புமணி,
சேலம் – ந.அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் 10 பா.ம.க. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது.
இது தொடர்பாக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ம.க.வின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை ( புதன்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் கலந்துகொண்டு பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.