மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாமக கூட்டணி

2 Min Read
வடிவேல் ராவணன்

வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் பாமக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது இதில் கூட்டணிக் குறித்து பாமக உயர்மட்ட குழு குழுவிடம் பல்வேறு ஆலோசனைகளை ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வழங்கினர். இதில் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்து கேட்டதாகவும் அதை உன்னிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுறிந்தனர்

ராமதாஸ் அன்புமணி

இதில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டணி குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கௌரவ தலைவர் ஜிகே மணி, பொருளாளர் திலகபாமா, பாமக மாவட்ட செயலாளர்கள் ,மாவட்ட செயலாளராக இருக்கும் எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்தவுடன் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜிகே மணி ஆகியோர் இன்று அல்லது நாளை கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமை நிலைய குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திடீர் திருப்பம் பாஜகவுடன் கூட்டணி என்று தகவல் வெளியாகி உள்ளது இதன்படி 10 பாராளுமன்ற தொகுதி ஒரு ராஜ சபா சீட் என தகவல் வெளியாகி உள்ளது.

தேச நலன் கருதி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

சேலத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொள்வார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக உடன் எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அன்புமணி

கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியவை

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இல்லாத மாற்று கூட்டணி அமைக்க , பாஜக கூட்டணியில் இடம் பெறுவது தான் சரியான முடிவு என்ற அடிப்படையில் தான் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் ராமதாஸ் பேச்சுஇது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைவதாகவும் நிர்வாகிகளிடம் விளக்கம் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் குழம்பி போயிருந்த நிலையில் கூட்டணியை தெளிவாக அறிவிக்க தனக்கு அதிகாரம் அளித்தாலும் நிர்வாகிகள் தன்னுடைய கருத்தை பேசி கூட்டணியை உறுதி செய்திருப்பதாகவும் மருத்துவர் ராமதாஸ் பேச்சு.

இதனிடையே கூட்டதில் பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ்,மருத்துவர் ராமதாஸும் அன்புமணியும் இணைந்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.கூட்டணி குறித்த முடிவில் எனக்கும் மருத்துவர் ராமதாஸுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், தான் அமைச்சராக வேண்டுமென்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்ற முடிவு எடுக்கவில்லை எனவும் அதுபோன்ற செய்திகள் வேண்டுமென்றே பரப்பப்படுவதாக நிர்வாகிகள் இடம் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply