நேருவை விட உயர்வானவர் பிரதமர் மோடி – பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி..!

1 Min Read

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது. ஏனென்றால், நேருவை விட உயர்வானவர் பிரதமர் மோடி என பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சாதனைகளுடன் பிரதமர் மோடியை ஒப்பீடு செய்ய முடியாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாஜக

‘நீட் தேர்வு’ விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

இந்த விவாதத்தை தொடங்கி வைத்து, பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி பேசியதாவது:- நேருவுடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில், பிரதமர் மோடியின் சாதனைகளை யாருடனும் ஒப்பீடு செய்ய முடியாது.

ஜவாஹர்லால் நேரு

அவர் தன்னிகரற்ற தலைவர். ஜவாஹர்லால் நேரு மிகவும் வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர். ஆனால், பிரதமர் மோடி எளிய பின்புலத்தில் இருந்து உயரிய பதவிகளுக்கு முன்னேறியவர்.

அதுமட்டுமின்றி தனக்குத்தானே பாரத ரத்னா விருதை வழங்கிக்கொண்டவர் நேரு. ஆனால், கட்சி பாகுபாடின்றி குறிப்பாக காங்கிரஸைச் சேர்ந்த 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்கியவர் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி

அரசமைப்பை காக்க வேண்டும் என தெரிவிக்கும் காங்கிரஸ், தங்களது ஆட்சிகாலத்தின் போது அதற்கு மாறாகவே நடந்துள்ளது. அரசமைப்பு முகவுரையை மாற்றி எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநில அரசை கலைக்கும் பணிகளை மேற்கொண்டது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இரு தலைவர்கள் கைது செய்யப்பட்டவுடன் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது. அவர்கள் ஆட்சியின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த எண்ணற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்றார்.

Share This Article

Leave a Reply